நமாண்டஅள்ளிகிராமத்தில் மின்சாதன சுவிட்ச் பாக்ஸ்களை சரி செய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 செப்டம்பர், 2024

நமாண்டஅள்ளிகிராமத்தில் மின்சாதன சுவிட்ச் பாக்ஸ்களை சரி செய்யக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் உள்ள நமாண்டஅள்ளி  ஆதிதிராவிடர் காலணியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் இறைக்கும் மின் மோட்டார், தெருவிளக்குகளுக்கு மின் சாதன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.


ஆனால் அதில் உள்ள மின் சாதன பெட்டி உடைந்து கடந்த 4 வருடமாக  மின் சாதன கருவிகள் ஆபத்தான நிலையில் உள்ளது, இதனால் சுவிட் போடவே பயமாக உள்ளதாகவும், இனி வரும் காலம் மழைக்காலம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad