ஜிட்டாண்டஅள்ளியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 செப்டம்பர், 2024

ஜிட்டாண்டஅள்ளியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம், ஜிட்டாண்டஅள்ளி யில் உள்ள  தனியார்  மண்டபத்தில் காரிமங்கலம்  மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வக்கில் MVT.கோபால்   தலைமையில்,  நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்,   ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பிணர் ஆ.மணி கலந்து கொண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று தந்து வெற்றி பெற செய்த  தொண்டர்களும் நிர்வாகிகளுக்கும்  நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.


அதனை தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.


இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அடிலம் அன்பழகன், முனியப்பன், பி.கே.அன்பழகன், வழக்கறிஞர் சந்திரசேகர்,  பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, ஒன்றிய கவுன்சிலர் லதாராஜாமணி, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் சண்முகம், தனகோடி, சிவாஜி, ஹரிபிரசாத், யுவராஜ்  உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad