தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திமுக நகர கழகம் சார்பில் செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்களின் தலைமையில் 6ம் தேதி நாளை மதியம் 2 மணிக்கு பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள மயூரா ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் நடைப்பெற உள்ளது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பிணர் ஆ.மணி, அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். அதனை தொடர்ந்து, கழக ஆக்கப் பணிகள், கலைஞர் நூற்றாண்டுவிழா, வரும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
அது சமயம் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கட்சியின் முன்னோடிகள், இந்நாள், முன்னாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , ஒன்றிய குழு உறுப்பினர்கள் தொன்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு பாலக்கோடு பேரூராட்சி தலைவரும், பேரூர் நகர கழக செயலாளருமான பி.கே.முரளி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக