தருமபுரி மாவட்ட ஆட்சியரின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 செப்டம்பர், 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியரின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி.


தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி: ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, தமது கடின உழைப்பினாலும், நற்சிந்தனையாலும் இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்து, நமது தாயகத்தின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்திய தத்துவமேதை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தருமபுரி மாவட்டம் தற்போது கல்வியில் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது. இதற்காக அல்லும் பகலும் ஆசிரியர் பெருமக்கள் அயராது உழைத்து வருகின்றனர். 


தருமபுரி மாவட்ட மாணவர்கள் குறிப்பாக நீட், ஜேஇஇ, என்எம்எம்எஸ், ட்ரஸ்ட் முதலமைச்சர் தகுதித் தேர்வு, தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று மாநில அளவில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்று வருகின்றனர்.


ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியை இளம் தலைமுறையினருக்குக் கற்பித்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். 


ஆசிரியர் பணி சிறக்கட்டும்! அறிவிலோங்கித் தமிழ்நாடு உயரட்டும்!, என தனது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad