பாலக்கோடு அருதே வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 செப்டம்பர், 2024

பாலக்கோடு அருதே வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் கைது.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள  வீரன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் பிரபு (வயது.25) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். 


கடந்த 2ம் தேதி கண்ணப்பன் என்பவரின் விவசாயி நிலத்தில்  உள்ள சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்து கிடப்பதாக மகேந்திரமங்கலம்   போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி  அரசு மருத்துவகல்லூரி சவக் கிடங்கிற்க்கு அனுப்பி வைத்தனர்.


ஆனால்  வாலிபர் மின்சாரம் பாய்ந்து சாகவில்லை எனவும், திட்டமிட்டு கொலை செய்திருப்பதாக கூறி, இறந்த பிரபுவின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று  ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில்,  சாலைமறியலில் ஈடுபட்டனர்.


 தகவலறிந்த பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், உறவிணர்களிடம்  இது தொடர்பாக  விசாரித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இன்று நில உரிமையாளர் கண்ணப்பன் (வயது .62) என்பவரை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad