தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பஸ்நிலையம் எதிரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட வரலட்சுமி நோன்பு திருவிழா செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைப்பெற்றது.
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு திரௌபதி அம்மனுக்கு வளையல்கள் மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. இதில் திருமணமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க வேண்டி விரதம் இருந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கோவிலுக்கு வந்திருந்த அனைத்து சுமங்கலி பெண்களுக்கும் மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, தேங்காய், தாம்பூலம் உள்ளிட்டவைகளைவயதான சுமங்கலி பெண்கள் வழங்கி ஆசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளாக பெண்பக்தர்கள் கலந்து கொண்டனர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக