மாரண்டஅள்ளி அடுத்த ஆத்துக் கொட்டாய் கிராமத்தில் குடிபோதையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 செப்டம்பர், 2024

மாரண்டஅள்ளி அடுத்த ஆத்துக் கொட்டாய் கிராமத்தில் குடிபோதையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த ஆத்துக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமசந்திரன் (வயது. 20) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது அம்மா கேன்சர் நோயினால் அவதிப்பட்டு வந்தார், தனது அம்மாவிற்க்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த முடியவில்லை என்ற  வேதனையில்  மதுகுடிக்க ஆரம்பித்தவர், நாளடைவில்  குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகினார்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி மாலை மது போதையில் வீட்டிற்க்கு வந்தவர்,  வீட்டில் உள்ளவர்களிடம் அம்மாவை சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என கூறி அழுதுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியல் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த இவரது குடும்பத்தினர், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், தீவிர சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad