தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 30.09.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 30.09.2024 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி (BE/BA/BSc/B.com etc) கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
ஆகவே அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வித் தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரெஸ்ஸர் அப்ரண்டீஸாக சேர்ந்து தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெறலாம்.
டிப்ளமோ மற்றும் டிகிரி (BE/BA/BSc/B.com etc) கல்வித் தகுதி உடையவர்கள் ஆப்சனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று NSDC/SSC வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ் பெறலாம். தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.
இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8500/- முதல் ரூ.18000/- வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே ஐடி.ஐ. 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி (BE/BA/BSc/B.com etc) கல்வித் தகுதி உடையவர்கள், இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி வரும் 30-09-2024 அன்று தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைப்பெறும் சேர்க்கை முகாமில் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம் தருமபுரி (கடகத்தூர்) எனும் விலாசத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது 94422 86874 8778447162, 7548844547 மற்றும் 7010865277 ஆகிய அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக