தர்மபுரி மாவட்டம் அரூர் நகரில் திமுக கட்சியின் பவள விழாவையொட்டி அரூர் நகர கிளை சார்பில் அக்கட்சி உறுப்பினர்களுக்கு திமுக கொடி வழங்கப்பட்டது, திமுகவின் 75 ஆம் ஆண்டு பவளவளவை முன்னிட்டு கட்சியினர் தங்கள் இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கட்சி கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார், இதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் அரூர் நகர கிளை சார்பில் அக்கட்சியின் நகர நிர்வாகிகளுக்கும் அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு திமுக கட்சிக்கொடிகளை அரூர் நகர செயலாளர் முல்லைரவி வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், நகர துணை செயலாளர் செல்வதயாளன், எஸ்ஏசி.குமார், தொமுச தலைவர் காந்தி, ஞானசேகரன், ரகுமான், சூர்யா வெங்கடேசன், ரகுராமன், நாகராஜ், தமிழ்வாணன், மஸ்தான், ரமேஷ், பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக