காலை 11.00 மணிக்கு அரூர் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் திமுகவின் மேற்கு மாவட்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.மனோகரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் C.கிருஷ்ணகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் மாவட்ட நிர்வாகிகள் MM.முருகன் R வேடம்மாள் GL.வெங்கடாசலம் கே.சென்னகிருஷ்ணன் R.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ஆ.மணி ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் மாநில தீர்மான குழு MS.விசுவநாதன், ஆதிதிராவிட நலக் குழு மாநில துணை செயலாளர் சா.ராசேந்தின், அ.சத்தியமூர்த்தி, சூடப்பட்டி சுப்பிரமணி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கலந்துக் கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.
கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கேட்டு இறுதியாக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் இதுரை நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து சிறப்புரை ஆற்றினார். 6 மாவட்ட சொற்குழு கூட்டம் மற்றும் 26 நிர்வாகிகள் கூட்டம் 06 சார்பு அணி கூட்டங்கள், 38 BL2 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 1057 கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் MRK பன்னீர்செல்வம் 23 மூத்த முன்னோடிகளுக்கு அவர்கள் வீட்டிற்கு சென்று நேரடியாக பொற்கிளி வழங்கினார்கள்.
இல்லம்தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை 895 படிவங்கள் மூலம் 17860 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது, இளைஞர் அணி நிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் ரூ.739400 நிதி வழங்கப்பட்டுள்ளது, புதிய உறுப்பினர் சேர்க்கை 157388 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது, OMR Sheet மூலம் அரசின் திட்டங்கள் பயன்பெறும் 163773 குடும்பங்கள் கணகெடுக்கப்பட்டது. பாப்பிரெட்டப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நூலகம் அமைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது.
ஒன்றிய பேரூர் பொது உறுப்பினர்கள் கூட்டம் 8 நாட்களில் 25 கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் நிர்வாகிகள் வழங்கிய 123 மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வுகான அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்றும் கட்சியின் பவளவிழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கொடி ஏற்றிட மாவட்ட கழகம் சார்பாக கட்சி கொடி வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கட்சியின் ஆக்கப் பணிகளை எடுத்துரைத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார், இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ராஜகுமாரி நன்றியுரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக