பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் உள்ளக புகார் குழு (ICC) மற்றும் பாதுகாப்பு பெட்டி(SAFETYBOX) அமைத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் உள்ளக புகார் குழு (ICC) மற்றும் பாதுகாப்பு பெட்டி(SAFETYBOX) அமைத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் அவர்கள் தலைமையில் 02.09.2024 அன்று நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலும் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீர்வு, தடை) ன்படி உள்ளக புகார் குழு (ICC) மற்றும் பாதுகாப்பு பெட்டி(SAFETYBOX) அமைத்திட ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள்ளக புகார் குழு (ICC) மற்றும் பாதுகாப்பு பெட்டி (SAFETYBOX) அமைத்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளக புகார் குழு (ICC) மற்றும் பாதுகாப்பு பெட்டி (SAFETYBOX) வருகிற 07.09.2024-க்குள் அமைக்க வேண்டும். அமைக்காத அலுவலகம் மற்றும் நிறுவனங்களின் மீது ரூபாய் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, கல்வியல் இணை இயக்குநர் திருமதி.சிந்தியாசெல்வி, சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.நடராஜன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக