பாலக்கோட்டில் சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு பொறியாளர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

பாலக்கோட்டில் சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு பொறியாளர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடைப்பெற்ற சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு   கண்காணிப்பு பொறியாளர்  சசிகுமார் நேற்று ஆய்வு செய்தார். பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், குண்டாங்காடு பகுதியில் கட்டி முடிக்கப்பபட்ட உயர்மட்ட பாலம் மற்றும் வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளிசாலை தண்டுகாரனஹள்ளியில் நிறைவுற்ற சாலை விரிவாக்க பணிகளையும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும்  பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சாலையோரங்களில் இருபுறமும்  மரக்கன்றுகளை  நட்டு  நன்றாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் நாகராஜீ, உதவிக் கோட்டப் பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவிப் பொறியாளர் ரஞ்சித் மற்றும் சாலை ஆய்வாளர்கள்  உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad