வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


தருமபுரி மாவட்டத்தில், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் தகுதியுள்ள 16 நபர்களுக்கு வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகங்களில் பணியாற்றிட அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.09.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பெ) திரு.செம்மலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம் ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad