தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நல மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நல மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் (13.09.2024) அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை (மெலிதல் தன்மை, குள்ளத்தன்மை, எடை குறைவு), இளவயது திருமணம், இளவயது கர்ப்பம், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளின் சேர்க்கை விவரம் நலத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையில் அதிக கவனம் செலுத்துமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குழந்தை திருமணம் தொடர்பாக வட்டார அலுவலர்கள் அதிக கவனம் செலுத்தவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்கவும், இது தொடர்பாக குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக செயல்படும் அனைவர் மீதும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.ச.பவித்ரா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.நடராஜன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மகளிர் அதிகார மைய பணியாளர்கள், சமுகநலத் துறை, வட்டார அலுவலர்கள், களப்பணியாளர்கள், மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக