தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கெசர்குளி சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் திமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பிணர் ஆ.மணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள் வரும் உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஒன்றிய செயலாளர்கள் MVT.கோபால் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி ஒன்றிய கவுன்சிலர் அழகுசிங்கம் ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக