தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் முத்தூட் மினி நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.இந்நிறுவனம் CSR மூலமாக இலவச தையல் மிசின் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் திரு. பாலசுப்பிரமணி அவர்கள் நிறுவன வளர்ச்சி திட்டங்கள் பற்றி விளக்கினார்.
பின்னர் செங்குட்டை கிராமத்தை சேர்ந்த வாடிக்கையாளர் திருமதி இந்துமதி அவர்களுக்கு தையல் மிசின் வழங்கினார் .விழாவில் முத்தூட் மினி மேலாளர் திரு. சிவகுமார், கிளை மேலாளர் திரு. இளையராஜா மற்றும் கிளை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக