அப்போது ராமு அவர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் அருகில் இருந்த மரக்கட்டையால் ராமுவை அடித்துள்ளனர். ராமுவின் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டதால் ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இதனை சற்றும் எதிர் பார்க்காதவர்கள் யாருக்கும் தெரியாமல் ராமுவின் உடலை அவரது கிணற்றிலேயே தள்ளி விட்டு எதுவும் நடக்காதது போல் சென்று விட்டனர்.
அடுத்த நாள் அவ்வழியாக சென்றவர்கள் ராமுவின் உடல் கிணற்றில் மிதப்பதை கண்டு மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து விசாரித்து வந்த நிலையில் முருகன், பரந்தாமன் இருவரும் போலீசிக்கு பயந்து கொலையை ஒப்புக் கொண்டு மாரண்டஅள்ளி போலீசில் சரனடைந்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக