TNPSC Group-II & II-A தேர்வு எழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 செப்டம்பர், 2024

TNPSC Group-II & II-A தேர்வு எழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு.


தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-Group II & II-A பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 14.09.2024 (சனிக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 101 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 27540 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.

தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசி நேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வர்கள் தேர்வு நாளான 14.09.2024 அன்று காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது. என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad