உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 செப்டம்பர், 2024

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் .


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 10 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட & உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.


இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 செப்டம்பர் மாதத்திற்கான உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நல்லம்பள்ளி வட்டத்தில் இன்று (18.09.2024) காலை 09.00 மணி முதல் நாளை (19.09.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு பராமரிக்கப்படும் உள்நோயாளி, வெளிநோயாளி பதிவேடுகளை நேரடியாக ஆய்வு செய்தும், கர்ப்பிணி தாய்மார்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.


இதனைதொடர்ந்து, பண்டஅள்ளி நியாய விலைக்கடையில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பண்டங்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கற்றல் திறன் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நல்லம்பள்ளி வட்டம், பங்குநத்தம் ஊராட்சி கிளை நூலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குடிநீர், சாலைவசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.


பண்டஅள்ளி ஊராட்சியை சேர்ந்த செந்தில் என்பவர் வான்கோழி வளர்க்கும் பண்ணையை நேரடியாக ஆய்வு செய்து, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, தீவனம் வழங்கும் பணிகள் மற்றும் கோழிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும், இந்த தொழில் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் குறித்தும் கேட்டறிந்து, அந்த பகுதியில் அதிக அளவில் விளையும் சாமை அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


நாகர்கூடல் ஊராட்சி, பேபி மருதஅள்ளி கிராமத்தில் தலா ரூ.8.90 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இரண்டு குளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், நாகர்கூடல் முதல் அரக்காசனஅள்ளி வரை செல்லும் சாலையில் நாகாவதி ஓடையின் குறுக்கே ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.3.45 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தொடர்ந்து, நாகர்கூடல் முதல் மூசகவுண்டன் கொட்டாய் வரை 1.25 கி.மீ தொலைவிற்கு ரூ.46.42 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகர்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மதிய உணவு சமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு சமைக்கப்பட்டுள்ள உணவினை சாப்பிட்டு, மாணவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் உணவு குறித்தும், மாணவர்களின் கற்றல்திறன் குறித்தும் கேட்டறிந்தார்.


2023-2024ஆம் நிதியாண்டில் அட்டப்பள்ளம், பச்சியம்மன் கோவில் அருகில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதையும் பார்வையிட்டு, குடிநீர் விநியோக செய்யும் பணிகளை விரைவாக செய்து முடிக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் நல்லம்பள்ளியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.57.00 கோடி மதிப்பில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


மேலும், அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார். ஆய்வினை தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.


மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான பயனாளிகளுக்கு சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நல்லம்பள்ளி வட்டாரத்தில் அதிகளவில் சிறுதானியங்கள் பயிரிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சீதோஷ்ணநிலை காரணமாக ஏற்படும் அம்மைநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவமுகாம்களை நடத்த துணை இயக்குநர் (மருத்துவம்) அவர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் 5 பயனாளிக்கு 5 வீட்டுமனை பட்டாக்களையும், 4 பட்டாமாறுதல் உத்தரவுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, தொப்பூர் ஊராட்சி, உம்மியம்பட்டி கிராமத்தில் குறும்பர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஊராட்சியின் அடிப்படை தேவைகள் குறித்து இருளர் இன பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி, உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000/-மும், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.1000/-மும் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்று மக்களின் நல்வாழ்விற்காகவும், வாழ்க்கைத்தர உயர்விற்கும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை தெரிந்துகொண்டு, விண்ணப்பித்து, பயன்பெற்று நலமுடன் வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும், மாலையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரை வழங்கவுள்ளார்கள். 


இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.அ.லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (மருத்துவம்) மரு.ஜெயந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி.சுமதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.இளவரசன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் திரு.பிரசன்னா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் திருமதி.சந்தோசம், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.குணசேகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவராமன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.லோகநாதன், திரு. சர்வோத்தமன் மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad