தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிர் விடுதலை இயக்க மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மகளிரணி மாவட்ட செயலாளர் சாக்கம்மாள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கலந்து கொண்டு பேசுகையில் நாளை சேலத்தில் தலைவர் தலைமையில் நடைபெறும் மண்டல செயற்குழு கூட்டத்தில் மகளிர் அணியினர் திராளக பங்கேற்க வேண்டும் அக் -2ல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டையில் நடைபெறும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் பங்கேற்க வேண்டும் மாநாட்டிற்கு வரும் பெண்கள் தலைமை உத்தரவிட்டதின் பேரில் உடைகள் அணிந்து வரவேண்டும் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும்.
தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாகனங்கள் நரிப்பள்ளி தானிப்பாடி மூங்கில்துறைபட்டு வழியாக செல்லவேண்டும் அனைத்து வாகனங்களும் நரிப்பள்ளி சோதனை சாவடியில் பதிவு செய்யப்படும் என கூறினார் இந்நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர் சா.அசோகன் அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர்கள் தீரன்தீர்த்தகிரி ராஜ்குமார் இளையராஜா சிந்தைமா.தமிழன் ராமலிங்கம் மகளிர் அணியின் நிர்வாகிகள் மகாராணி ஞானசுடர் அருள்மொழி மோனிஷா சங்கீதா அம்சராணி சரண்யா சியாமளா சத்தியவாணி கலந்து கொண்டனர். இறுதியில் மகளிரணி நகர செயலாளர் லதா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக