தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் இறுதிசெய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் இறுதிசெய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம்.


தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ வாக்குசாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகளை இறுதிசெய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.09.2024) நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு முன்திருத்தப் பணிகளான வாக்குசாவடியின் புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.  


அதன் அடிப்படையில் கடந்த  29.08.2024 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியிடப்பட்டு வாக்குசாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பான கோரிக்கைகளை 29.08.2024 முதல் 04.09.2024 வரை வழங்க தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்தித்தாள்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது. இக்கோரிக்கைகளின் படியும், வருவாய் கோட்டாட்சியர்கள்/வட்டாட்சியர்கள்/துணை வட்டாட்சியர்கள் மேற்கொண்ட களஆய்வின்படியும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் பின்வருமாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன


ருமபுரி மாவட்டத்தில ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1489 வாக்குச்சாவடிகள் இருந்தது. வாக்குசாவடி மறுசீரமைப்பு பணியில் தற்பொழுது  11  புதிய வாக்குச்சாவடிகள்/புதிய பாகங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வாக்குசாவடி மறுசீரமைப்பிற்கு பின்பு மாவட்டத்தில் மொத்தம் 1500 வாக்குசாவடிகளாக உயர்ந்துள்ளதுவாக்குசாவடி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள விவரங்களின் வட்ட வாரியான மற்றும் சட்டமன்ற தொகுதிவாரியான தொகுப்பு பின்வருமாறு:-

  

வட்ட வாரியான வாக்குச்சாவடி மறுசீரமைப்பு - 2024

. எண்

வட்டம்

புதிய பாகங்கள் உருவாக்குதல் (எண்ணிக்கை)

பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல் (எண்ணிக்கை)

கட்டடம் மாற்றம் (எண்ணிக்கை)

இட மாற்றம் (எண்ணிக்கை)

வாக்கு சாவடியின் பெயர் மாற்றம் (எண்ணிக்கை)

1

பாலக்கோடு

5

2

0

1

0

2

காரிமங்கலம்

1

4

0

4

0

3

பென்;னாகரம்

2

0

0

1

0

4

தருமபுரி

0

2

4

0

0

5

நல்லம்பள்ளி

0

0

0

2

1

6

பாப்பிரெட்டிப்பட்டி

0

0

0

0

0

7

அரூர்

3

0

0

1

0

மொத்தம்

11

8

4

9

1

 

சட்டமன்ற தொகுதிவாரியான வாக்குச்சாவடி மறுசீரமைப்பு விவரம் - 2024

. எண்

சட்டமன்ற தொகுதி 

தற்போதுள்ள வாக்குசாவடிகளின் எண்ணிக்கை

புதிய பாகங்கள் உருவாக்குதல் (எண்ணிக்கை)

பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல் (எண்ணிக்கை)

கட்டடம் மாற்றம் (எண்ணிக்கை)

இட மாற்றம் (எண்ணிக்கை)

வாக்கு சாவடியின் பெயர் மாற்றம் (எண்ணிக்கை)

1

பாலக்கோடு

272

5

6

0

4

0

2

பென்னாகரம்

294

2

0

0

2

0

3

தருமபுரி

308

0

2

3

2

1

4

பாப்பிரெட்டிப்பட்டி

314

0

0

1

0

0

5

அரூர்

301

4

0

0

1

0

மொத்தம்

1489

11

8

4

9

1

மேற்கண்ட விவரங்களின்படி வாக்குச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகள் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக புதுடில்லி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின்பு வாக்குச்சாவடி பட்டியலில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.  


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்ட அலுவலர், திரு.இரா.வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், தேர்தல் தனிவட்டாட்சியர் திரு..அசோக்குமார், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad