பெத்தனஅள்ளி கிராமத்தில் குடும்ப பிச்சனையால் இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 செப்டம்பர், 2024

பெத்தனஅள்ளி கிராமத்தில் குடும்ப பிச்சனையால் இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அடுத்த பெத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிவன் இவரது மனைவி பானு (வயது.24) இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 மற்றும் 3 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பானு ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார், கனவன் - மனைவிக்கிடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 17 ம் தேதி இன்று காலை மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மணமுடைந்த காணப்பட்ட பானு கனவன் வேலைக்கு சென்றதும், காலை சுமார் 10 மணிக்கு 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய சென்றார்.


கிணற்றின் அருகில் சென்றதும், 5 வயது குழந்தை பானுவின் கையை உதறி விட்டு தப்பி அலறி கொன்டே சென்றது. இதனிடையே பானு 3 வயது ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்தார். கிணற்றின் அருகில் தீவன புல் அறுத்து கொண்டிருந்த 74 வயது முதியவர் பாலாஜி இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக கினற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றார்.


முதலில் குழந்தையை காப்பாற்றி மேலே கொண்டு வந்தவர் மீண்டும் பானுவை காப்பாற்ற முயன்றார், ஆனால் பானு கிணற்றின் ஆழத்திற்க்கு சென்று விட்டதால் அவரால் காப்பாற்ற முடியவில்லை, இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தார், பொதுமக்கள் வந்து கிணற்றில் இருந்த பானுவை மேலே கொண்டு வந்தனர், அதற்குள் பானு மூச்சு திணறி உயிரிழ்ந்தார். தகவல அறிந்த பாலக்கோடு போலீசார் பானுவின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும் திருமணமான 6 ஆண்டுகளிலேயே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தர்மபுரி சப்-கலெக்டர் காயத்ரி விசாரித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad