பென்னாகரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 அக்டோபர், 2024

பென்னாகரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.


பென்னாகரத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைப்பு முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேர்ந்த பாமக அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில விவசாய அணி துணை தலைவருமான இன்பசேகரன் முன்னிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி பென்னாகரம் சந்தை தோப்பு மைதானத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் நகரச் செயலாளர், வீரமணி பென்னாகரம் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய பதிலளிகள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad