கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபநிநீரின் காரணமாகவும் காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறையுதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதமாக இருந்து வந்த நிலையில் நேற்று நிலவரப்படி வினாடிக்கு 8000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது, இதனைத் தொடர்ந்து காவேரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 10ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக