அனுமந்தபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அதிரடி ஆய்வில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 அக்டோபர், 2024

அனுமந்தபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அதிரடி ஆய்வில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் .

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா மற்றும் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர்    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையை தடுக்க தீவிர சோதனை  மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய  உதவி ஆய்வாளர்கள், தீவிர சோதனை மேற்கொண்டதில், காரிமங்கலம்   கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் உள்ள  ஒரு பெட்டி கடை மற்றும் அனுமந்தபுரம்  அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு மளிகை கடை என இரண்டு கடைகளில் இருந்தும்  தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா  உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.  


அதனை தொடர்ந்து காரிமங்கலம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, 2 கடைகளுக்கும் தலா 25 ரூபாய் அபராதமும், 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்தும் உத்தரவிட்டார்.

 

அதனை தொடர்ந்து  காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , காரிமங்கலம் காவல் நிலைய முதல் நிலை காவலர் அருண்  ஆகியோர் இணைந்து மேற்படி  இரண்டு கடைகளுக்கும் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி  உடனடி, அபராதம் செலுத்திடவும்,  15 தினங்கள் கடை திறக்கக் கூடாது எனவும்  எச்சரித்து கடையை மூடி  சீல் வைத்து  நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad