காவேரியில் 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து; குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

காவேரியில் 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து; குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் சுற்றுலாப் பணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில நாட்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறையுதுமாக இருந்து வந்தது, மேலும் சில தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக காவேரி நீர் பிடிப்பு பகுதிளில் பெயில் வரும் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இரு தினங்களுக்கு முன்பு நீர்வரத்து வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடியாக இருந்தது இந்நிலையில் நேற்று நீர்வரத்தானது 6000 கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8000 கன அடி ஆகவும், காலை 9 மணி நிலவரப்படி மேலும் அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாகவும்  அதிகரித்தது.


அதனைத் தொடர்ந்து மாலை 2 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சிறிய அருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியுள்ளது 


மதியம் 3 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கன அடியாகவும் மாலை 4 மணி நிலவரம் படி 20 ஆயிரம் கண அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது, மேலும் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


மேலும் காவிரி கரையோரங்களில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து  அதிகரிக்க கூடும் இன்று அதிகாரிகள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad