தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த கரகூர் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி (வயது.30) இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக உள்ளார்.
கடந்த மாதம் 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து (வயது.35) என்றபெண்மனி, ஏரி வேலை செய்த பணம் 2 ஆயிரம் ரூபாய் பெற வங்கிக்கு சென்றுள்ளார், வங்கியில் பணம் கிடைக்காததால் கலைச்செல்வியிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சின்னமுத்து, அவரது கனவர் ஜம்பேரி (வயது.53), முருகேசன் (வயது.50) ஆகியோர் கலைச்செல்வியை சராமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கலைச்செல்வி பாலக்கோடு அரசுமருத்துவமணையில் சிகிச்சை பெற்று கொண்டு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக