தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்து, இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களின் உத்தரவின் பேரில், பாலக்கோடு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தளவாய்அள்ளி புதூர் கிராமத்தில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் விற்பனை செய்தது, கண்டறியப்பட்டது, விசாரித்ததில் சாந்தா (வயது.55) என்பதும், அரசு மது பானங்களை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3430 ரூபாய் மதிப்புள்ள 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக