சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 36 தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.1.32 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 அக்டோபர், 2024

சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 36 தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.1.32 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று பெற்றுகொண்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (30.09.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 476 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 13 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.29.02 இலட்சம் மதிப்பில் பணியிடத்து விபத்து மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகைகான கசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 36 தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.1.32 இலட்சம் மதிப்பீட்டில் மூக்குக் கண்ணாடி நிதி உதவி, திருமண நிதி உதவி, கல்வி நிதி உதவி, ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வழ்வு துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 5 நபர்களுக்கும் 3 மருத்துவமனைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், இத்திட்டத்தில் கீழ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 பயனாளிகளுக்கு பரிசுகளையும், புதியதாக 6 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், வருவாய் துறையின் சார்பில் 2 நபர்களுக்கு சிட்டாவில் பெயர் நீக்கம் செய்த ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.லலிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணியம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad