மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பானதோர் சேவையை செய்து வருகின்றனர், உறவின்றி இருப்பவர்களுக்கும், ஏழ்மையில் இருப்பவர்களுக்கும் உறவாய் இருந்து மை தருமபுரி அமைப்பினர் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் செக்கோடி கிராமத்தில் உள்ள சிங்காரவேலு என்ற மாற்றுத்திறனாளி நண்பருக்கு வீல்ஷேர் தேவை அறிந்து மை தருமபுரி அமைப்பினர் வீல்ஷேர், புத்தாடை, இனிப்புகள் வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக CKM தலைமை நிர்வாகி மாதேஷ், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அருணாசலம், கிருஷ்ணன், கலைச்செல்வன், ஜெய் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக