பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அதிமுக 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 அக்டோபர், 2024

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அதிமுக 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அதிமுக வின் 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின்படியும், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ  அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நகர செயலாளர் ராஜா தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராசன், முன்னாள் ஒன்றிய செயாளர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், முன்னாள் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினர்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கவிதாசரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவிச்சந்திரன், கோவிந்தசாமி, பி.செட்டி அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கனபதி, வார்டு கவுன்சிலர்கள் விமலன், குருமணி, கண்ணையன், முன்னாள்  கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், வீரமணி, புதுர் சுப்ரமணி, கிளை நிர்வாகிகள் கொளந்தை, ராஜா, அர்ஜூனன், காமராஜ்  தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் அசோக், கிரிநாத்,  சோமேஷ், நந்தகுமார், விஷ்ணு, புஷ்பா, மோகன், உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad