தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகாவும் கூறுகின்றனர்.
இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் இப்பகுதியில் பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிய தேசியநெடுஞ்சாலை பயன்பாட்டிற்க்கு வந்துள்ளதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன, எனவே உடனடியாக பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக