தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள சாமனூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களின் தலைமை நடந்தது.
நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட அவைத்தலைவர் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொரவாண்டஅள்ளி, சாமனூர் ஊராட்சிகளில் உள்ள 1,826 அதிமுக உறுப்பிணர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சாமனூர் கிளை செயலாளர் சிவம் , பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, மாவட்ட கவுண்சிலர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக