தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளகத்தில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் எப்படி கொண்டாடுவது என்பது பற்றி தீயணைப்பு துறை சார்பாக ஒகேனக்கல் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு குழுவினர் மாணவ மாணவிகளுக்கு பட்டாசு வெடிக்கும் பயிற்சி, விபத்துக்கள் ஏற்பட்டால் எப்படி கையாளுவது என்பதை செய்து காட்டியும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன் உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களுக்காக விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக