தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் பாலக்கோடு காவல்துறை சார்பில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்கள் படித்த இளைஞர்களை குறிவைத்து சிலர் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் பணத்தை இழந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இளைஞர்கள் இது போன்ற பொய்யான நபர்களிடம் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், வெளிநாடுகளில் சென்று வேலை செய்ய விரும்பும் இளைஞர்கள் மத்திய அரசின் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு முழு விபரங்களை அறிந்து அதன் படி செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் உதவி காவல் ஆய்வாளர் கோகுல், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக