தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ஆயுத பூஜை விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூய்மை காவலர்களுடன் ஆயுத பூஜை நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேருராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக