பாலக்கோடு புதிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்யும் இளைஞர்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

பாலக்கோடு புதிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்யும் இளைஞர்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்.


தர்மபுரி மாவட்டம், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவிகள் செல்லும் பேருந்தின் அருகில் வீலிங் செய்து சாகசம் காட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாய் பரவி வருகிறது.

இளைஞர்கள் பைக்  ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான வீலிங்  பயணங்களை தடுக்க, போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்க விட்டவாறு நடத்தும் சாகசங்களால் சிலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர். 


சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இச்சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.  இளைஞர்களின் இந்த அசாதாரண சாகச பயணம் காண்போரை மிரள வைத்து வருகிறது. தர்மபுரியில் இருந்து  பாலக்கோடு நோக்கி  தனியார் மகளிர் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது.


கர்த்தாரப்பட்டி நெடுஞ்சாலை அருகே  மகளிர் கல்லூரி பேருந்தின்  அருகில் வந்த ஒரு இளைஞர் திடீரென வீலிங் செய்து சாகசம் காட்டினார். அந்த பஸ்சை முந்தி செல்லாமல் பஸ்சின் வேகத்திற்கு இணையாகவே சென்று வீலிங் செய்தார்,


இதை சாலையில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad