பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஓகேனக்கல் குடிநீர் வழங்காத பேரூராட்சியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 அக்டோபர், 2024

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஓகேனக்கல் குடிநீர் வழங்காத பேரூராட்சியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு  ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக  மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு நகர தலைவர் கணேசன், மேற்கு ஒன்றிய தலைவர் சேட்டு, மாவட்ட செயற்குழு உறுப்பிணர்கள் ஸ்ரீதேவி, கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சின்னவன், நகர பொருளாளர் முனியப்பன் ஆகியோர் முன்னலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் பேருராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் தற்போது பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடிநீர் வழங்கி வருவதாகவும், இதனால் தொற்று நோய்கள், எலும்பு தேய்மானம், பல் தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் உண்டாவதால், உடனடியாக ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என கோரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளகள் டைகர் சிவா. ஜெய்கணேஷ், நந்தகிரி, நிர்வாகிகள் ராஜா, பச்சியப்பன், சரவணன், இராமரு, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad