பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் - மாணவ - மாணவிகள் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 அக்டோபர், 2024

பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் - மாணவ - மாணவிகள் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு  எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இனைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவகுரு, கல்லூரி முதல்வர் முனைவர் தீர்த்தலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


இதில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாவட்ட  இரத்த வங்கி மருத்துவர் கன்யா, சுகாதார ஆய்வாளர் இளவரசு உள்ளிட்ட மருத்துவ குமுவினர் இரத்ததான முகாமில் இரத்தம் வழங்குபவர்களை பரிசோதனை செய்து இரத்தம் பெறுவதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொண்டனர்.


இம்முகாமில் கல்லூரி மாணவ, மானவிகள், பேராசிரியர்கள் என  120 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இரத்தம் வழங்கிய மாணவ-மாணவிகளுக்கு பழரசம் வழங்கினர்.


இம்முகாமிற்க்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ரமேஷ், அன்பரசு ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad