தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பேளாரஅள்ளி ஊராட்சியில் உள்ள தொட்டம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தொட்டம் பட்டி அதிமுக கிளை செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்சிக்கு பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர்கோபால் நகர செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டிட துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அன்னா தொழிற்சங்க கிளை செயலாளர் சக்திவேல், அம்மா பேரவை கிளை செயலாளர் கணேசன், கிளை தலைவர் மாது, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, சுப்ரமணி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் அசோக், புஷ்பராஜ், சுந்தரபாண்டி, கிளை நிர்வாகிகள் கொளந்தை, கணேசன், சுரேஷ், அஜித்முருகன், வக்கில் சின்னசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக