தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜீவா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பாலக்கோடு பேரூராட்சி நிதியிலிருந்து ஒரு கோடி 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 6 வகுப்பறைகள் கொண்ட 2 அடுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக நடைப்பெற்ற பூமி பூஜையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டிசுப்ரமணி, ஒன்றிய துணை செயலாளர் ரவி, மீனவர் அணி துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அழகுசிங்கம், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனாஇதாயத்துல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், ரூஹித், நிர்வாகிகள் பெரியசாமி, சரவணன், செந்தில், குமரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக