பாலக்கோடு அருகே வழுவழுப்பான நெடுஞ்சாலையால் அரசு பேருந்து தலைக்குப் புற கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 அக்டோபர், 2024

பாலக்கோடு அருகே வழுவழுப்பான நெடுஞ்சாலையால் அரசு பேருந்து தலைக்குப் புற கவிழ்ந்து விபத்து 20 பேர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக இன்று காலை 10 மணிக்கு பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, மேட்டூரை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராசு (வயது.37) நடத்துநர் நடராஜ் பேருந்தை இயக்கி வந்தனர்.


பாலக்கோடு அடுத்த கோடியூர் நெடுஞ்சாலையில் முன்னால் நின்று கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் மீது மோதாமல் இருக்க கோவிந்தராஜ் பிரேக் போட்டுள்ளார்.ஏற்கனவே மழை பெய்து கொண்டிருந்த காரணத்தாலும், சாலை வழுவழுப்பாக இருந்ததினாலும், திடீர் என பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒரு சுற்று சுற்றி கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது.


இதில் பேருந்தில் பயணம் செய்த ராயக்கோட்டையை சேர்ந்த சாலம்மாள் (வயது.33), பனைக்குளத்தை சேர்ந்த்த வெண்ணிலா (வயது.50), பெங்களூரை சேர்ந்த சாந்தி (வயது.55), சீனிவாசன் (வயது.53) சத்யாரத்தினம் (வயது.46) தர்மபுரியை சேர்ந்த பாஸ்கரன்(வயது.36) சேலத்தை சேர்ந்த சிவராஜ் (வயது. 43) மற்றும் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 10 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.


தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், தாசில்தார் ரஜினி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று போக்குவரத்தை சீர் செய்து, காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad