அல்லியூர் கிராமத்தில் நிழற்கூடம் மற்றும் தார்சாலையை அகலப்படுத்த கோரி பொதுமக்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 அக்டோபர், 2024

அல்லியூர் கிராமத்தில் நிழற்கூடம் மற்றும் தார்சாலையை அகலப்படுத்த கோரி பொதுமக்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்பு.

 

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அல்லியூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் 4 வழிச்சாலை அமைக்க அங்கிருந்த  நிழற்கூடம் மற்றும் தார்சாலையின் ஒரு பகுதி கையகப்படுதப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய நிழற்கூடம் அமைத்து தார்சாலையை விரிவுபடுத்தி தருவாக உறுதி அளித்திருந்தனர்.


ஆனால் 4 வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 6 மாதத்திற்க்கு மேலாகியும் இதுவரை நிழற்கூடம் அமைக்கப்படவில்லை, தார்சாலையும் விரிவுபடுத்தப்படவில்லை. அல்லியூர் கிராமத்தை சுற்றி கொல்லன்கொட்டாய், கல்லாங்கட்டணூர், சங்கம்பட்டி, வரகூர், மாட்டியாம்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.


இவர்கள் அன்றாடம் விவசாய விளை பொருட்களை எடுத்து செல்வதற்க்கும், பள்ளி கல்லூரி வாகனங்கள் செல்வது உள்ளிட்ட வண்டி வாகனங்கள் செல்ல அல்லியூர் தார்சாலையே  பிரதான வழியாகும், இந்நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால் வாகனங்கள் அல்லியூர் சாலையில் திரும்ப முடியாத நிலையிலும், பொதுமக்கள் நிழற்கூடம் இல்லாததால் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேன்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அல்லியூர் சாலையில் திரண்டனர்.


தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பொது மக்களிடம் விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad