இராசிக்குட்டை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதியதில் இருவர் பலத்த காயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 அக்டோபர், 2024

இராசிக்குட்டை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதியதில் இருவர் பலத்த காயம்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வேலு இவரது மகன் திருப்பதி (வயது.19) இவர் அதே பகுதியை சேர்ந்த  இவரது நண்பரான  நரசிம்மன் (வயது .19) என்பவருடன்  மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு மாரண்டஅள்ளியில் இருந்து பஞ்சப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இராசிக்குட்டை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த சொகுசு கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad