வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாலக்கோடு, காரிமங்கலம் 14வது வட்ட மாநாடு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாலக்கோடு, காரிமங்கலம் 14வது வட்ட மாநாடு நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாலக்கோடு, காரிமங்கலம்  14வது வட்ட மாநாடு  வட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டிற்க்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராசன், கிரைசாமேரி, மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்மாநாட்டில் மாவட்ட குழு உறுப்பிணர் ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


இம்மாநாட்டில் பாலக்கோடு வட்டத்தில் தக்காளி ஜூஸ் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட வேண்டும், பாலக்கோடு வட்டத்தில் உள்ள பிக்கனஅள்ளி, ஜக்கசமுத்திரம், அண்ணாமலை அள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய ஊராட்சிகளை பாலக்கோடு ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும், மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து தனி ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும், தூள்செட்டிஏரி, எண்ணேகொல் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் உயிர்காக்கும் சிகிச்சைமருந்துகள் மற்றும் சி.டி, எம்.ஆர்.ஐ, அல்ட்ரா ஸ்கேன்களை உடனடியாக  அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோழர்கள் ஆறுமுகம், கோவிந்தசாமி, கலாவதி, வரதராஜன், நக்கீரன், காவ்யா, சேகர், சந்திரசேகரன், ராஜா, காரல்மார்க்ஸ், பாண்டியம்மாள், முருகன், அப்துல்சமது, கோவிந்தராஜ், சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad