அரூர் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 அக்டோபர், 2024

அரூர் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (22.10.2024) ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், அரூர் பொது நூலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், அரூர் பேரூராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கூடுதல் கட்டிடத்தினை பார்வையிட்டு, அரூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாணவியருடன் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி, கெளாப்பாறை அம்பேத்கார் காலனி வறட்டாற்றின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 50.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணி, கீரைப்பட்டி ஊராட்சி, இருளர் தெருவில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 73.39 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, கீரைப்பட்டி ஊராட்சி, இருளர் குடியிருப்பு பகுதியில் PM-JANMAN (PMAY-G) திட்டத்தின் கீழ் 7- பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி, கீரைப்பட்டிபுதூர் குக்கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு பட்டா வழங்குதல் குறித்து ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.


இந்த ஆய்வின்போது, அரூர் வட்டாட்சியர் திரு.இராதாகிருஷ்ணன், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இளங்குமரன், உதவிப்பொறியாளர்கள் / பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad