தருமபுரி மாவட்டத்தில் உள்ள இனிப்பு, கார கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 அக்டோபர், 2024

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இனிப்பு, கார கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை.


தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக நிறமிகளை சேர்க்க கூடாது, உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் அறிக்கை.

தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ள தமிழ்நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுபொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்தபந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது. 


தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலி உணவு கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆடர்களின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்டவிதிகளின் படி, உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும். இனிப்பு, மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். 


அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை சேர்க்க கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. பண்டிகைகால இனிப்பு வகைகளை பரிசுபேக்கிங் செய்யும்போது, பால்பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கு விவரச்சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் தயாரிப்பாளர்களின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அல்லது ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவுப்பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண், சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விவரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.


மேலும் தடை செய்யப்பபட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது. பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சில்லறை உணவு பொருட்களுக்கும் விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad