கடத்தூர் மற்றும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 அக்டோபர், 2024

கடத்தூர் மற்றும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (15.10.2024) ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சி, சிட்கோ எஸ்டேட் பகுதியில் தமிழ்நாடு அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட உணவு பேக்கேஜிங் செய்வதற்கான பிளாஸ்டிக் கண்டெய்னர் தயாரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மோட்டான்குறிச்சி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், மோட்டான்குறிச்சி ஊராட்சி நத்தமேடு காலனி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் மூலம் ரூ.15.26 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணியினையும், மோட்டான்குறிச்சி ஊராட்சி, நத்தமேடு மலையடிவார பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.4.06 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, நத்தமேடு நியாய விலைக்கடையில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட தொழில்மையம் பொது மேலாளர் திரு.ச.பிரசன்ன பாலமுருகன், கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வடிவேலன், திரு.மணிவண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad