பாலக்கோடு பேருந்து நிலையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 அக்டோபர், 2024

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூந்து நிலையத்தில், வருவாய்த்துறை, தீயணைப்பு துறை  மற்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு  வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளி வெடி விபத்துக்கள் குறித்து  முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி  தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், தீயனைப்பு நிலைய அலுவலர் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.


நிகழ்ச்சியில் வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் திடிர்  வெள்ளத்தில்  பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சிக்கி கொண்டால்எவ்வாறு  மீட்பது, சாலையில் நடந்து செல்லும் போது மின் விபத்துக்களை தவிர்க்க  மழை காலங்களில்  மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றின் கீழ் பொதுமக்கள் நிற்பதும், கால்நடைகளை கட்டுவதும்  தவிர்க்க வேண்டியதன் அவசியம், 


மின் கம்பி அறுந்து தொங்கி கொண்டிருந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரியத்திற்க்கு தகவல் அளிக்க வேண்டும், நோய் பரவாமல் இருக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், 


மேலும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுக்களை கைகளில் வைத்து வெடிக்க கூடாது, பற்ற வைத்து தூக்கி போட கூடாது அவ்வாறு செய்வதால் அடுத்தவர் மேல் விழுந்து வெடிக்கும் அபாயம் உள்ளது, சில நேரங்களில் கைளிலேயே வெடிக்கும் வாய்ப்பும் உள்ளது.


இதனால் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் என்பதால் இதனை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பட்டாசுக்களை எவ்வாறு வெடிப்பது என்பன குறித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


 இந்த நிகழ்ச்சியில் துணை தாசில்தார் எழில்மொழி,   மண்டல துணைதாசில்தார் நாராணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், உதவியாளர் சுப்ரமணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad