தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் மின் வாரியம் சார்பில் பணியாளர்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மழை காலங்களில் ஏற்ப்படும் மின் பழுதுகளை கவனமுடன் கையாள்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாலக்கோடு மின் வாரிய கோட்டம் செயற் பொறியாளர் வனிதா தலைமை வகித்தார்.
அவர் பேசும்போது, மின்சார வாரிய ஊழியர்கள் மழைக்காலங்களில் மற்றும் இதர அனைத்து பணி நேரங்களிலும் மின் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என்று பழுது நீக்கத்தின் போது உரிய பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து நுகர்வோர் மின் இணைப்புகளிளும் கட்டாயமாக ஆர்சிபி பொருத்தப்பட்டுள்ளதா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இறுதியில் அனைத்து பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்சியில் உதவி செயற் பொறியாளர்கள் அருண்பிரசாத், சங்கர்குமார், மோகன்குமார், முன்ராஜ் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக